செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வியாழன், 25 ஜனவரி 2018 (22:16 IST)

எப்போதுதான் தொடங்கப் போகிறது ‘விஸ்வாசம்’?

அஜித் நடிப்பில் உருவாகவுள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
அஜித் - சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்’. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு வெற்றி  ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். ஆனால், படத்தில் நடிக்கும் ஹீரோயின் உள்ளிட்டவர்கள் யார் என்ற விவரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
 
இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் படங்களை ரிலீஸ் செய்த விஜய், சூர்யா ஆகியோர் தங்களுடைய அடுத்த  படங்களின் ஷூட்டிங்கைத் தொடங்கிவிட்டனர். ஆனால், அஜித் படம் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. இதனால், படத்தின் ஷூட்டிங் எப்போதுதான் தொடங்கப் போகிறது எனக் காத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.