செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 28 ஜனவரி 2018 (11:04 IST)

நாடு முழுவதும் முதல் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது

இந்தியாவில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ நோய் வராமல் தடுப்பதற்கான சொட்டு மருந்து அளிக்கும் திட்டம் அனைத்து மாநிலங்களிலும், இந்திய ஆட்சிப்பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் சுமார் 17 கோடி குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்கள் அமைக்கப்பட்டு, 70 லட்சம் குழந்தைகளுக்கு  போலியோ சொட்டு மருந்து தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் மட்டும் 7 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.  5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடுவது அவசியம். போலியோ சொட்டு மருந்து முதல் தவணையாக இன்றும், 2-ம் தவணை மார்ச் மாதம் 11-ந் தேதியும் கொடுக்கப்பட வேண்டும்.
 
இந்நிலையில் சென்னையில் முதலமைச்சர் பழனிசாமி போலியோ சொட்டு மருந்து முகாமினை இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  ராதாகிருஷ்ணன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.