நடிகர் சல்மான் கானுக்கு பிறந்தநாள் ! டுவிட்டரில் டிரெண்டிங்
இந்திய சினிமாவில் பிரமாண்டமான பாலிவுட்டில் கடந்த 1988 பீவி ஹோ தோ ஐசி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் சல்மான் கான். அதன்பின் அடுத்த ஆண்டே வெளியான (1989) மைனே பியார் கியா என்ற இந்தி திரைப்படத்தில் நடிகராக களமிறங்கினார். அத்திரைப்படத்தில் அவரின் நடிப்பிற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் அவர் பெற்றார்.
அன்று இன்றைய தபாங் -3 திரைப்படம் வரை ஏராளமான திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமாவில் சூப்பர்ஸ்டாராகவும், பில்னஸ் உலகில் பாடிகார்டாகவும் இருக்கிறார்.
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் ரசிகர்களால் சல்மான் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார். இன்று அவரது 54 வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு சினிமா பிரபலங்கள் மற்றும், அவரது ரசிகர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் #HappyBirthdaySalmanKhan @BeingSalmanKhan #SalmanKhanBirthday என்ற ஹேஸ்டேக்குகள் உருவாக்கி சமூக வலைதளங்களில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.