செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 18 டிசம்பர் 2019 (12:58 IST)

#SKMeetsSK சிவகார்த்திகேயனை வாழ்த்திய சல்மான் கான் - வைரல் வீடியோ!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இரும்புத்திரை இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’ஹீரோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்க பாலிவுட் ஹீரோ அபாய் தியோல் வில்லன் ரோலில் நடிக்கிறார்.   மேலும் நடிகர் அர்ஜுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வருகிற கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 20ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது. 
 
இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயனுடன் பாலிவுட் நடிகர் சல்மான் கலந்துகொண்டார். கோலிவுட் எஸ்.கே "ஹீரோ" படத்தின் ப்ரோமோஷனிலும் , பாலிவுட் எஸ்.கே "தபாங் 3" படத்தின் ப்ரோமோஷனிலும் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் வாழ்த்திக்கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது சிவகார்த்திகேயனின் ரசிகர்கள்  #SKMeetsSK என்ற ஹேஸ்டேகை ட்விட்டரில் ட்ரெண்ட்  செய்து வருகின்றனர்.