கடைசி நேரத்தில் தள்ளிப்போன மம்மூட்டி பட ரிலிஸ்!

Last Modified புதன், 3 மார்ச் 2021 (15:50 IST)

மம்மூட்டி நடிப்பில் உருவான தெ ப்ரைஸ்ட் படத்தின் ரிலீஸ் கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மம்மூட்டியுடன் முதன் முதலாக மஞ்சுவாரியர் ஜோடி சேரும் படமாக த ப்ரைஸ்ட் படம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் படப்பிடிப்பு முழுவதும் நடத்தப்பட்டு ரிலீஸ் தேதியும் மார்ச் 5 என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இப்போது தேதி குறிப்பிடாமல் மீண்டும் பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் கேரளாவில் இரவுக் காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாலும் பல வெளிநாடுகளில் திரையரங்குகள் திறக்கப்படாததுமே இதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது.
இதில் மேலும் படிக்கவும் :