திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 8 பிப்ரவரி 2021 (15:27 IST)

மீண்டும் ஒரே படத்தில் மம்மூட்டி & மோகன்லால் – நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி!

மலையாளத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்க உள்ளனர்.

மலையாள சினிமா உலகின் சூப்பர் ஸ்டார்களாக மம்மூட்டியும் மோகன்லாலும் உள்ளனர். இவர்கள் இருவரின் ரசிகர்களுக்கு இடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் எழுந்தாலும் இருவரும் நண்பர்களாகவே பழகி வருகின்றனர். இந்நிலையில் இப்போது இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளனர்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மோகன்லால் ‘நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவும் விதமாக நாங்கள் இருவரும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க உள்ளோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.