வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 10 ஜனவரி 2021 (09:29 IST)

ஓவரா போகும் ரசிகர்கள் சண்டை… மம்மூட்டி வீட்டுக்கே சென்ற மோகன் லால்!

நடிகர் மோகன் லால் தனது சக நடிகரான மம்மூட்டி வீட்டுக்கே சென்று பார்த்துள்ளது மலையாள சினிமா உலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் ரஜினி கமல், விஜய் அஜித் என ரசிகர்கள் அடித்துக் கொள்வது போல மலையாள சினிமாவில் மோகன்லால் மற்றும் மம்மூட்டி ரசிகர்கள் இடையே சமூகவலைதளங்களில் காரசாரமான போட்டி நடக்கும். சமீப காலமாக அந்த வார்த்தை தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் ரசிகர்களை சாந்தப்படுத்தும் வகையில் மோகன் லால் மம்மூட்டி வீட்டுக்கே சென்று அவரைப் பார்த்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்தாவது இரு நடிகர்களின் ரசிகர்களும் அடித்துக் கொ
வதை நிறுத்த வேண்டும் என்பதே பொதுவான ரசிகர்களின் ஆசை.