புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 31 டிசம்பர் 2018 (12:04 IST)

திரையரங்கில் மாஸ் காட்டிய "பேட்ட" டிரெய்லர்!

திரையங்கில் ரஜினியின் பேட்ட ட்ரைலர் திரையிடப்பட்டதால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்  உற்சாகத்துடன் ஆட்டம் போட்டு கொண்டாடினர். 


 
சேலத்தில், ரஜினி ரசிகர்களுக்காகவே பிரத்யேகமாக "பேட்ட" படத்தின் டிரெய்லர் அங்குள்ள திரையரங்கில் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. இதனை ரஜினியின் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.
 
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் வரும் ஜனவரி மாதம் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது.
 
இப்படத்தின் ட்ரைலர் கடந்த 28ம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது இணய தளத்தில் உலக அளவில் உள்ள பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. 
 
இந்நிலையில் சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில், 5 ரோடு பகுதியில் உள்ள திரையரங்கில் ரஜினி ரசிகர்களுக்காக பேட்ட திரைப்படத்தின் டிரெய்லர் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது.
 
மேலும் இதற்கு முன்னதாக ரஜினி ரசிகர்கள் பேட்ட திரைப்படத்தை வரவேற்று திரையரங்கு முன்பு பட்டாசுகள் வெடித்தும் கேக் வெட்டியும் உற்சாகமாக கொண்டாடினர் என்பது கூடுதல் தகவல் .