செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 29 டிசம்பர் 2018 (21:47 IST)

வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே பொங்கல் அன்று மெட்ரோ ரெயில் சேவை?

சென்னை வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே பொங்கல் அன்று மெட்ரோ ரெயில் சேவை தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கோயம்பேடு- ஆலந்தூர், விமான நிலையம்- சின்னமலை, பரங்கிமலை- சென்டிரல், விமானநிலையம்- சென்டிரல், சின்னமலை-டி.எம்.எஸ். ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே 10 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் விடப்பட உள்ளது. இந்த வழியில் ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம், சென்டிரல், ஐகோர்ட்டு, மண்ணடி ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த புதிய வழித்தடத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந்தேதி டீசல் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் முடிந்தது. அதன்பின்னர் கடந்த 7-ந்தேதி மெட்ரோ ரெயில் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.
 
 
இதையடுத்து இந்த வழித்தடத்தில் ஆய்வு நடத்தி சேவையை தொடங்க அனுமதி அளிக்குமாறு ரெயில்வே பாதுகாப்புத்துறைக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் கடிதம் எழுதியது. 
 
அதன்படி வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் மனோகரன் வரும் 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 3 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது..
 
பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு முடிந்தவுடன் உடனடியாக அனுமதி வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அப்படி  அனுமதி கிடைத்தால், பொங்கல் பண்டிகை அன்று (15-ந்தேதி) வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை தாமதம் ஆனாலும் ஜனவரி மாத இறுதிக்குள் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் ஓட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.