வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 5 மே 2021 (21:35 IST)

பிரபல நடிகையின் மகளுக்கு’’ I Love you ’’சொன்ன நபர்...

நடிகை ரோஜாவின் மகளுக்கு ஒருவர் ஐ லவ் யூ எனக் கூறியுள்ளார்.

தமிழ், மற்றும் தெலுங்கு சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரோஜா.

இவர் ரஜினி, பிரஷாந்த், கார்த்திக்,பிரபு, சந்தியராஜ், சரத்குமார் உள்ளிட்ட அப்போதைய முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக இருந்தார்.

பின்னர் ஆந்திர மாநில அரசியலில் ஆர்வம் காட்டிய அவர் கடந்த சட்டசபைத் தேர்தலில் எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ரோஜாவின் கணவர் பிரபல இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. இந்தத் தம்பதிக்கு அன்ஷூ மாலிகா என்ற மகள் உள்ளார். இவரும் தாயைப் போல் தெலுங்கு சினிமாவில் நடித்திருக்கிறார்.இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெட்டிசன்களுடன் உரையாடினார். அப்போது ஒரு நெட்டிசன் அன்ஷூ மாலிகாவிடம் ஐ லவ் யூ எனக் கூறினார். பதிலுக்கு அன்ஷூ ஸ்பானிஷ் மொழியில் அவரிடம் தன் அன்பை வெளிப்படுத்தினார்.

இவர், சினிமாவில் நடிப்பாரா மாட்டாரா என பலரும் அவரிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் அதற்கு பதில் தெரியாது எனத் தெரிவித்துவிட்டார்.