1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 31 ஜனவரி 2022 (23:23 IST)

சூப்பர் ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் புதிய பட அப்டேட் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு சர்காரு வாரு பாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படத்தில் மகேஷ்பாபு , கீர்த்திசுரேஷுடன் பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடித்துவருகின்றனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துவருகிறார்.

இப்படம் குறித்து எப்போது அப்டேட் வெளியாகும் என மகேஷ்பாபுவின் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.     இ ந் நிலையில் வரும் மே மாதம் 12 ஆம் தேதி  சர்க்காருவாரு பாட்டா படம் உலகம்  முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
#SarkaruVaariPaata