’விஜய்’ கொடுத்த ஊக்கமே என் வெற்றிக்கு காரணம் - பிரபல நடிகர் நெகிழ்ச்சி

vijay
Last Modified ஞாயிறு, 3 மார்ச் 2019 (11:07 IST)
இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அருண்விஜய் நடித்திருக்கும் படம் தடம். படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பி கிடைத்துள்ளது.திரையரங்கிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருகிறது.
இந்நிலையில் தடம் படத்துகாக நடிகர் அருண்விஜய் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஜனனம் படம் தோல்வி அடைந்ததால் நான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டேன். படமும் தாமதமாக வெளியானது. நாங்கள் எடுத்த முயற்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அடுத்து  என்ன செய்வது என்ற குழப்பத்தில் ஆழ்ந்தேன்.
 
அப்போது எனக்குத் தெரிந்தவர்கள் சிலர் படத்தயாரிப்பில் ஈடுபடுமாறு கூறினார்கள். சிலர் முன்னணி நடிகரான விஜய் அவர்களை சந்திக்க  சொன்னார்கள். நான் விஜய்யை அணுகி இதைப் பெற்றி கூறிய போது, அவர் என்னை நடிப்பைத் தொடருமாறு கூறினார்.
vijay
மேலும், நீ சிறப்பாக நடனமாடுகிறாய். என்னைவிட நன்றாக சண்டைப் போடுகிறாய் என்று என்னை ஊக்கப்படுத்தினார்.அந்த வார்த்தைகள் என்னை அடுத்த கட்டத்திற்கு செல்லுமாறு ஊக்குவித்தது. அதற்காக அவருக்கு நான் நன்றியுடன் இருப்பேன் இவ்வாறு தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :