திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2019 (20:42 IST)

’15 வயதில் ’விபச்சாரத்தில் தள்ளிய தாய்... பிரபல நடிகையின் சுயசரிதையில் பதிவு ...

உலகில் பிரபலமானவர்களாக புகழ் பெற்ற பதவிகளிலும், பல்வேறு துறைகளில் சாதனைகள் நிகழ்த்தியவர்களில் ஆரம்பகால வாழ்க்கை பெரும் போராட்டங்களும் சோதனைகளும் நிரம்பியதாகவே இருந்துள்ளது. இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகை டெமி மூர் தனது சுயசரிதைப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 1970 மற்றும் 80 ஆம் ஆண்டுகளில் ஹாலிவுட் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த டெமி மூர், தன் இளம் வயதில் சந்தித்த வேதனைகளை தன் சுயசரிதைப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
 
அதில், ஒருமுறை நான் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தேன்ல் அப்போது வாசலில் ஒரு பெரியவர் அங்கு நின்று கொண்டிருந்தார். அவரிடம் யார் நீங்கள் ? என்ன வேண்டும் என கேட்டேன். அதற்கு அவர், நான் உன் தாயிடன் உன்னை விலைக்கு வாங்கியதாகக் கூறி, என்னை அழைத்துச் சென்றார். அதன்பின்னர் பலமுறை நான் பலாத்காரம் செய்யப்பட்டேன் என தெரிவித்துள்ளார்.