திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 7 நவம்பர் 2024 (14:44 IST)

ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்! அடுத்தடுத்து குறி வைக்கப்படும் ‘கான்’ நடிகர்கள்! - பாலிவுட்டில் அதிர்ச்சி!

பாலிவுட் திரையுலகில் சல்மான் கானை தொடர்ந்து அடுத்து ஷாரூக் கானுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

பாலிவுட்டின் டாப் 3 கான் நடிகர்களாக வலம் வருபவர்கள் சல்மான் கான், ஷாரூக் கான், ஆமிர் கான். கடந்த மாதம் நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்னாள் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பின்னணியில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இருப்பது தெரிய வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னதாக சல்மான் கானுக்கு நண்பரான முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொல்லப்பட்டார். இதற்கு பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்ற நிலையில் சல்மான் கான் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
 

 

இந்நிலையில் பாலிவுட்டின் மற்றொரு பிரபல நடிகரான ஷாரூக் கானுக்கு போன் மூலமாக கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுதொடர்பாக மும்பை பந்த்ரா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், மிரட்டல் போன் கால் சத்தீஸ்கரில் இருந்து ஃபைசான் என்பவரிடமிருந்து வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீஸார் மேலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

கடந்த ஆண்டில் பதான் படத்தில் நடித்த ஷாரூக்கானுக்கு கொலை மிரட்டல் வந்த நிலையில் அவருக்கு மத்திய பாதுகாப்பு படையின் ஒய்+ பாதுகாப்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பாலிவுட்டின் கான் நடிகர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K