1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (17:33 IST)

பட்ஜெட்-ல் எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.- கமல்ஹாசன்

2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் அறிவிக்கப்பட்டது. பல்வேறு துறை சார்ந்த நிதி ஒதுக்கீடு அறிவிப்புகள், புதிய திட்டங்கள், கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றிற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். அதில், மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத #Budget2022 இது. பொருளாதார நசிவால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழைமக்களுக்கான திட்டங்கள், வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம், சிறுகுறு நடுத்தர தொழில்கள் மேம்பட உதவி என எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.