திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 16 மே 2023 (14:56 IST)

"சாமுண்டேஸ்வரி" என்ற பெயரை மாற்றிய தி கேரளா ஸ்டோரி நடிகை - காரணம் இது தான்!

அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு உள்ளான திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. பாலிவுட்டில் தயாரான இத்திரைப்படம் கடந்த  மே 5  மாதம்  ஆம் தேதி  வெளியானது. இந்த படம் தமிழ்நாடு கேரளா தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.
 
தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில அமைப்புகளால் எதிர்ப்பு ஏற்பட்டதன் காரணமாக திரையரங்கு உரிமையாளர்கள் இந்த படத்தை திரையிடவில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் அதே நேரத்தில் கேரளாவில் இன்னும் இந்த படம் திரையிடப்பட்டு வருகிறது. சுதிப்தோ சென் என்பவர் இயக்கிய இப்படத்தில் நடிகைகள் அடா ஷர்மா, சித்தி இதானி மற்றும் சில நடிகைகளில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
 
இப்படத்தில் நடித்த நடிகை அடா சர்மா விபத்தில் சிக்கியதாக செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது? ஒருவேளை இது திட்டமிட்டு நடந்ததா என சந்தேகங்கள் எழுந்த நிலையில் இது குறித்து அவரே ட்விட் செய்தார். 
அதில், " நான் நன்றாக இருக்கிறேன் நண்பர்களே. எங்கள் விபத்து குறித்து பரவும் செய்திகளால் நிறைய மெசேஜ் வருகின்றன. மொத்த குழுவும், நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம், பெரிதாக எதுவும் ஆபத்து இல்லை, பெரிதாக ஒன்றும் இல்லை ஆனால் அக்கறைக்கு நன்றி என கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவரை பாதுக்காப்பாக இருக்க சொல்லி அறிவுரை கொடுத்தனர். 
 
 
இந்த நிலையில் தன உண்மையான பெயர் சாமுண்டேஸ்வரி ஐயர் என்று கூறிய அவர் அதனை அடா ஷர்மா என மாற்றிக்கொண்டதாக கூறியுள்ளார். காரணம் சாமுண்டேஸ்வரி  என்ற பெயரை யாரும் சரியாக உச்சரிக்காததால் தான் இப்படி மாற்றிக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.