செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 13 மே 2023 (18:07 IST)

ரூ. 100 கோடி வசூலை நெருங்கும் ''தி கேரளா ஸ்டோரி '' திரைப்படம்

தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம்  ரூ. 100 கோடி வசூலை நெருங்கி வருவதயால்  என்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பாலிவுட்டில் தயாரான தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் கடந்த  மே 5  மாதம்  ஆம் தேதி  வெளியானது என்பதும் இந்த படம் தமிழ்நாடு கேரளா தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில அமைப்புகளால் எதிர்ப்பு ஏற்பட்டதன் காரணமாக திரையரங்கு உரிமையாளர்கள் இந்த படத்தை திரையிடவில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் அதே நேரத்தில் கேரளாவில் இன்னும் இந்த படம் திரையிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு  முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு தடைவிதித்துள்ளது. இதை எதிர்த்து,தயாரிப்பாளர் சுப்ரீம் கோர்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வசூல் குவித்து வருகிறது.

முதல் நாளில்  ரூ.8.3 கோடியும், இரண்டாம் நாளில் ரூ.11.22 கோடியும், 3 வது நாளில் ரூ.16 கோடியும் வசூலான இப்படம், இதுவரை ரூ.93.37 கோடி  வசூலித்து உள்ளது. இனி வரும் வாரத்தில் இப்படம் ரூ. 100 கோடி வசூல் ஈட்டிவிடும் என்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.