வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2024 (11:52 IST)

உருவாகிறது ‘தி கேரளா ஸ்டோரி 2’: ஹேமா கமிட்டி அறிக்கை தான் கதையா?

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த அறிக்கையின் பின்னணியில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும், அதுதான் "தி கேரளா ஸ்டோரி 2" என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான "தி கேரளா ஸ்டோரி" என்ற திரைப்படம், கேரளாவில் இளம்பெண்களை மதமாற்றம் செய்து, அவர்களை தீவிரவாதிகளின் பாலியல் அடிமைகளாக வைத்திருப்பதாக காட்சிப்படுத்தி, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் நாடு முழுவதும் ஒரு பக்கம் வரவேற்பையும் இன்னொரு பக்கம் எதிர்ப்பையும் கிளப்பிய நிலையில், ஒரு சில மாநிலங்களில் தடைசெய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஹேமா கமிஷன் அறிக்கையை மையப்படுத்தி தான் இந்த படம் உருவாக இருப்பதாக இணையதளங்களில் செய்திகள் வெளியானது.

ஆனால், இந்த படத்தின் இயக்குநர் கூறியதாவது, "தி கேரளா ஸ்டோரி" படத்தின் அடுத்த பாகம் உருவாக்கப்படுவது உண்மைதான். ஆனால், ஹேமா கமிஷன் அறிக்கைக்கும், இந்த படத்தின் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எப்படி இவ்வாறு வதந்திகள் இணையத்தில் பரவுகின்றன என்பது எனக்கு தெரியவில்லை," என்று தெரிவித்துள்ளார். மேலும், முதல் பாகத்தில் நடித்த அடா சர்மா, இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

Edited by Mahendran