ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2024 (13:19 IST)

மாதம் ரூ.2100 மகளிர் உதவித்தொகை வழங்கப்படும்: பாஜக தேர்தல் அறிக்கை..!

jp nadda
அரியானா மாநிலத்தில் பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகியுள்ள நிலையில், அதில் மகளிர்க்கு மாதம் ரூபாய் 2100 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் அக்டோபர் ஐந்தாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இன்று பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

இந்த அறிக்கையில் முன்னாள் அக்னி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும், பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. லாடோ லட்சுமி என்ற திட்டத்தின் அடிப்படையில், பெண்களுக்கு மாதம் ரூபாய் 2100 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹரியானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், 10 தொழில் நகரங்கள் அமைக்கப்படும் என்றும், உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள எந்த அரசு மருத்துவமனை மற்றும் பொறியியல் கல்லூரிகளிலும், ஓபிசி, எஸ்சி சமூகத்தைச் சேர்ந்த ஹரியானா மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும் என்றும் பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகம் உள்பட பல மாநிலங்களில் மகளிர்க்கு உதவி தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில்,  தற்போது பாஜகவும் அதே அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran