செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 18 மார்ச் 2020 (15:35 IST)

உங்களை பார்க்க ஆசையாக உள்ளது - தமிழ் நடிகருக்காக இந்தியா வரும் குவாடன்!

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்போன் பகுதியை சேர்ந்தவர் யராக்கா பெய்ல்ஸ். இவரது ஒன்பது வயது மகன் குவாடன். உடல் நல குறைபாடு உடைய இவர் அங்குள்ள சாதாரண மக்கள் படிக்கும் பள்ளியிலேயே படித்து வருகிறார். குள்ளமான உடலமை கொண்டிருக்கும் குவாடனை அங்குள்ள மற்ற சிறார்கள் ஒதுக்கி வைப்பதாகவும், அடிக்கடி துன்புறுத்துவதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது தாய் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் கதறி அழும் சிறுவன் குவாடன் தன்னை மற்றவர்கள் மிகவும் துன்புறுத்துவதாகவும், தான் இறந்து விட்டால் நிம்மதியாக இருக்கும் என கூறியுள்ளான். தூக்கு கயிறு ஒன்றை கேட்ட இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரையும் கலங்கடித்து.


இதையடுத்து அந்த சிறுவனுக்கு ஆதரவு கொடுத்து, பல்வேறு பிரபலங்கள் பண உதவி செய்தனர்.  தனக்கு கிடைத்த 3.43 கோடி ரூபாய் பணத்தை அறக்கட்டளைக்கு கொடுத்து மேலும் மக்கள் மனதில் இடம் பிடித்தான் சிறுவன் குவாடன். இந்நிலையில் அவன் நமது தமிழ் சினிமா நடிகர் "கின்னஸ் பக்ரு" வை நேரில் பார்க்க ஆசைப்படுவதாகவும் அதற்காக இந்தியா வர விருப்பம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளான். இவர் முழு நீள படத்தில் நடித்த  உயரம் குறைந்த மனிதர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.