வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 18 மார்ச் 2020 (11:19 IST)

மாஸ்டர் படத்தில் வில்லன் விஜய் சேதுபதியின் மிரட்டலான பெயர் இதுதான்...!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் சென்சாருக்கு செல்லும் என்றும் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதை குறித்து தான் கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வந்தது.

இந்த படத்தில் விஜய்க்கு நிகராக ரசிகர்கள் எதிர்பார்ப்பது விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் தான். வில்லன் ரோலில் நடித்துள்ள விஜய் சேதுபதி தளபதியுடன் மோதும் காட்சிகள் ரசிகர்கள் ஒவ்வொருவரையும் மெய் சிலிர்க்க செய்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் பெயர் "பவானி" என்ற தகவல் படத்தில் இடம்பெற்ற பொளக்கட்டும் பற பற என்ற பாடலின் மூலம் தெரியவந்துள்ளது.