ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 7 ஜனவரி 2022 (14:21 IST)

ஓடிடியில் வெளியாகும் தனுஷின் ஹாலிவுட் படம்! – க்ரேமேன் அப்டேட்!

பிரபல அவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஹாலிவுட் படம் ஓடிடியில் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஹாலிவுட்டில் பிரபலமான சூப்பர்ஹீரோ படமான அவெஞ்சர்ஸ் ஏஜ் ஆப் அல்ட்ரான், இன்பினிட்டி வார் மற்றும் எண்ட் கேம் போன்ற படங்களை இயக்கி உலக புகழ்பெற்றவர்கள் ரசோ ப்ரதர்ஸ். தற்போது இவர்கள் க்ரேமேன் என்ற நாவலை திரைப்படமாக எடுத்துள்ளனர்.

இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர்களான கிரிஸ் இவான்ஸ், ரியான் ரெனால்ட்ஸ், அனா டெ அர்மாஸ் போன்றோருடன் தமிழ் நடிகர் தனுஷும் நடித்துள்ளார். இதனால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு தமிழ் சினிமா ரசிகர்களிடையேயும் நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்த படம் கொரோனா காரணமாக திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் இந்த படத்தை வெளியிட நெட்ப்ளிக்ஸ் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.