திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash

வாத்தி ரெடி... வைரலாகும் தனுஷ் பட பூஜை புகைப்படங்கள்!!

தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள வாத்தியின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இந்நிகழ்வு தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

 
தனுஷ் நடிக்கவிருக்கும் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் திரைப்படத்திற்கு ‘வாத்தி’ மற்றும் ’சார்’ என்ற டைட்டில்கள் வைக்கப்பட்டது என்ற என்பதை பார்த்தோம். இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை ஆந்திராவில் நடந்துள்ளது. ஜனவரி 5 ஆம் தேதி முதல் தொடங்கும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கவுள்ளது. இந்நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
மித்ரன் ஜவகரின் ‘திருச்சிற்றம்பலம்’, கார்த்திக் நரேனின் ‘மாறன்’, செல்வராகவனின் ‘நானே வருவேன்’ உள்ளிட்டப் படங்களில் தற்போது நடித்துவரும் தனுஷ் அடுத்ததாக சேகர் கம்முலா, மாரி செல்வராஜ், ராம்குமார், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்டோரின் பெயரிடாதப் படங்களிலும் நடிக்க இருக்கிறார்.