வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 12 நவம்பர் 2022 (17:02 IST)

நடிகர் அஜித்திற்கு ரசிகர் வழங்கிய பரிசு ...வைரலாகும் புகைப்படம்

ajith61
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர், நடித்துவரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில், அஜித், மஞ்சுவாரியார் ஆகிய நடிகர்களின் டப்பிங் பணிகள் முடிந்துள்ளன.

இப்படம் பொங்கல்லு வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

 ALSO READ: விஜய் மற்றும் அஜித்தின் அறிமுக பட வீடியோவை பகிர்ந்த ப்ளூசட்டை மாறன்

சமீபத்தில், துணிவு பட இசையமைப்பாளர் ஜிப்ரான் படத்தின் முதல் சிங்கிள் பாடல் பற்றிய அப்டேட்டை கொடுத்தார். அதில் பாடல் ஆசிரியர் வைசாக் எழுதியுள்ள ‘’சில்லா சில்லா’ என்ற பாடலை அனிருத் குரலில் ஒலிப்பதிவு செய்துள்ளதாக அறிவித்தார். இப்பாடலுக்கான புரமோஷன் வீடியோ பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில்,   நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர் அஜித்தை நேரில் சந்தித்து, அவருக்கு சாய்பாபா படத்தை பரிசாக வழங்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Edited by Sinoj