செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (18:07 IST)

நடிகர் ஆர்யாவின் தங்கைக்கு லாட்டரில் முதல் பரிசு ! எத்தனை கோடி தெரியுமா??

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் ஆர்யா. இவரது தங்கை வெளிநாட்டு வசித்து வரும் நிலையில் அவருக்கு ரூ.32 கோடி லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது.

நடிகர் ஆர்யாவிம் தங்கை தஸ்லீனா ஐக்கிய அரபு அமீரகத்தில் தன் கணவருடன் வசித்து வருகிறார்.

அங்கு விற்கப்படும் டுட்டி ஃபிரீ லாட்டரிகளுக்கு பல கோடிக்கணக்கில் பரிசுகள் விழுவது வழக்கம்.

அமீரகத்தில் வசிக்கும் மக்கள் லாட்டர் சீட்டு வாங்குவதில் ஆர்வமுடன் உள்ளனர். இந்நிலையில் ஆர்யாவின் சகோதரி தஸ்லீனா ஒரு சீட்டை வாங்கினார். அவருக்கு முதல் பரிசாக  15மில்லியன் திர்காம்ஸ் விழுந்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ.32 கோடி ஆகும்.

ஆர்யாவின் சகோதரி தஸ்லீனா தற்போது தோஹாவின் வசித்து வருகிறார். இவரது கணவர் எம்.ஆர்.ஏ ரெஸ்டாரண்ட் நடத்திவரும் கடாஃபி ஆவார்.