புதன், 13 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (11:10 IST)

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ரிலிஸ் – தியேட்டர் அதிபர்களைக் கேள்வி கேட்ட விஷால் !

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் சென்னை வெற்றி தியேட்டர் அதிபருக்கு விஷால் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

இன்று வெளியாகியிருக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் இந்தியாவில் ரிலீஸாகி முன்பதிவிலேயே பல சாதனைகளைப் படைத்துள்ளது. தமிழகத்தில் பாகுபலி 2 மற்றும் 2.0 ஆகியப் படங்களுக்கு அடுத்த படியாக அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்ட படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. பல தியேட்டர்களில் சிறப்புக்காட்சியாக அதிகாலை 4 மணிக் காட்சிகள் இப்படத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான வெற்றி தியேட்டரின் உரிமையாளரான ராகேஷ் அவெஞ்சர்ஸ் படத்தில் நிறைய டிவிஸ்ட்கள் இருப்பதாகவும் அதனை யாரும் மொபைலில் வீடியோ எடுத்து வெளியிடக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார். அதற்காக தங்கள் தியேட்டரில் படம் பார்க்க வரும் அணைவரும் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்யவேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவ விஷால் ‘ வருடத்திற்கு ஒருமுறை வரும் ஹாலிவுட் படங்களுக்கு இந்தமாதிரி விதிகளை அமல்படுத்தும் நீங்கள் ஏன் தமிழ்ப் படங்களுக்கு இதை அமல்படுத்துவதில்லை’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள ராகேஷ் ‘சினிமாவுக்கு எப்போது துணையாக் இருக்கிறோம். பைரசியை ஒழிப்பதில் எங்களுக்கு மொழி ஒருத் தடையில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.