செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 31 டிசம்பர் 2018 (22:10 IST)

தமிழ் சினிமாவின் முதல் அடல்ட் காமெடி 3D படத்தில் யோகிபாபு-யாஷிகா

தமிழ் சினிமாவில் 'மை டியர் குட்டிச்சாத்தான்' முதல் '2.0' பல திரைப்படங்கள் 3D தொழில்நுட்பத்தில் வெளிவந்திருந்த நிலையில் முதன்முறையாக ஒரு அடல்ட் காமெடி திரைப்படம் 3Dயில் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் யோகிபாபு முக்கிய வேடத்திலும் அவருக்கு ஜோடியாக யாஷிகா ஆனந்தும் நடிக்கவுள்ளனர். மேலும் ஒரு முக்கிய வேடத்தில்  நிக்கி தம்போலி என்ற நடிகை நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை விஷுவல் கம்யூனிகேஷன் பட்டதாரியான அறிமுக இயக்குனர் விநாயக் சிவா இயக்கவுள்ளார். இந்த படம் குறித்து விநாயக் சிவா கூறியதாவது: "சில பிரபல நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூடிய வரைவில் அது சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். இப்போதைக்கு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபுவை ஒப்பந்தம் செய்திருக்கிறோம். யாஷிகா ஆனந்த் மற்றும் நிக்கி தம்போலி ஆகியோரும் அவருடன் இணைந்து நடிக்கிறார்கள்" என்றார்.

மேலும் இந்த படத்தை நான் 'அடல்ட் ஹாரர் காமெடி' என்று குறிப்பிடுவதை விட 'குறும்பு' வகையாக படம் என சொல்வேன். அதை நியாயப்படுத்தும் வகையிலான ஒரு சரியான கதை இருக்கிறது. வேடிக்கையான மற்றும் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் அச்சமூட்டும் விஷயங்களும் படத்தில் இருக்கும். மேலும் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் 3D மூலம் திகிலான மற்றும் பயமுறுத்தும் புதிய அனுபவத்தை வழங்குவதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம்" என்றும் அவர் தெரிவித்தார்