1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 6 ஏப்ரல் 2017 (17:40 IST)

படம் வெளிவரும் முன்னே பாரட்டுதலை பெற்ற 8 தோட்டாக்கள்!

'வெற்றிவேல் சரவணா சினிமாஸ்' சார்பில் எம். வெள்ளைப் பாண்டியன் மற்றும் 'பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்' - ஐ பி கார்த்திகேயன்  இணைந்து தயாரித்து இருக்கும் '8 தோட்டாக்கள்' திரைப்படத்தை, இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி  இருக்கிறார்.

 
இந்த படத்தில் புதுமுகம் வெற்றி, அபர்ணா, பாலமுரளி, எம் எஸ் பாஸ்கர், நாசர் ஆகியோர் முன்னணி கதாபாத்திங்களில் நடித்துள்ளனர். ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் அதிகரித்து இருக்கும் '8 தோட்டாக்கள்' படத்தை, வருகின்ற  நாளை 'சக்திவேல் பிலிம் பேக்டரி' சார்பில் வெளியிடுகிறார் சக்திவேல்.
 
8 தோட்டாக்கள் படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் தமிழ் திரையுலக நட்சத்திரங்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த அனைத்து நட்சத்திரங்களும், 8 தோட்டாக்கள் படத்தின் தரமான கதையையையும், அசத்தலான நடிப்பையும்,  திறமையான தொழில் நுட்ப வேலைகளையும் பாராட்டி வருகின்றனர்.