1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 12 ஜூன் 2021 (15:44 IST)

வணக்கம் நன்பர்களே… விஜய் டிவி நிகழ்ச்சியில் ஜி பி முத்து!

டிக்டாக் பிரபலம் ஜி பி முத்து விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளாராம்.

டிக்டாக்கில் மிகவும் பிரபலமாக இருந்தவர்களில் ஜி பி முத்துவும் ஒருவர். டிக்டாக் தடை செய்யப்பட்டதற்குப் பிறகு இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் இப்போது குடும்ப சூழல் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். இது அவரது பாலோயர்ஸ்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின்னர் அவர் சிகிச்சையில் தேறி வந்தார். இந்நிலையில் இப்போது அவருக்கு சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் நடிக்க அழைப்பு வந்துள்ளது.

அதன் ஒரு கட்டமாக விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3 ஆவது சீசனில் அவரும் ஒரு போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளாராம்.