தானா சேர்ந்த கூட்டமும், தங்கம் கொடுத்து சேர்த்த கூட்டமும்!
தளபதி விஜய் சமீபத்தில் ஆன்லைன் விமர்சகர்கள் உள்பட மீடியா நண்பர்களை அழைத்து அவர்களுக்கு ஒரு கிராம் தங்கக்காசு கொடுத்து அறுசுவை விருந்தும் அளித்தார். நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை மீடியா நண்பர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலில் அஜித் தனது மகள் கேரக்டரில் நடித்திருக்கும் பெண் குழந்தையை கொஞ்சும் காட்சிகள் இருந்தது
இந்த காட்சியை பார்த்த ஆயிரக்கணக்கானோர் தங்களுடைய மகளுடன் எடுத்த புகைப்படத்தை இணையதளத்தில் பதிவு செய்தனர். இவ்வாறு பதிவு செய்வதற்கு அஜித் தரப்பில் இருந்தோ விஸ்வாசம் படத்தின் குழுவினர்களிடம் இருந்தோ ஒரு நயா பைசா கூட கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை தமிழகத்தில் உள்ள தந்தைகள் பதிவு செய்த பதிவுகளே சூப்பர் ஹிட்டாக்கிவிட்டது.
இதுகுறித்து அஜித் ரசிகர்கள் 'தானா சேர்ந்த கூட்டம்' ஒரு பக்கமும் தங்கத்திற்கு சேர்ந்த கூட்டம் ஒரு பக்கமும் இருப்பதாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.,