திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 18 ஜனவரி 2023 (19:33 IST)

காற்றாடி நூலில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உடல் கருகி பலி!

boy
கர்நாடக மாநிலம் பெங்களூரில் காற்றாடி நூலில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஆர்.டி, நகரைச் சேர்ந்தவர் அபுபக்கர்(11). இவர் நேற்று மாலை தன் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவில் நூலில் காற்றாடி விட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, காற்றின் வேகத்திற்கு ஏற்பக் காற்றாடி  மேலே பறந்தது. இதைப்பார்த்து மகிழ்ச்சி அடைந்த சிறுவன்  மேலே இருந்த உயர் மின் அழுத்த கம்பியைக் கவனிக்கவில்லை.

மேலே சென்றிருந்த  காற்றாடி கீழே இறங்கி,  எதிர்பாராத விதமாக மின் அழுத்தக் கம்பியின் மீது உரசியது.

அதில், மின் அழுத்த கம்பியின் மின்சாரம் பாய்ந்துள்ளது.  அதைப் பிடித்த சிறுவனை தாக்கியதும்  அவர் கீழே சரிந்து விழுந்தார்.

அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது, ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறுவன் அபுபக்கர் உயிரிழந்தார்,

இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.