செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 21 ஜூலை 2018 (13:02 IST)

உலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்த விஜய்

2014 ஆம் ஆண்டு முதல் உலகின் தலைசிறந்த நடிகர்கள் மற்றும் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஐஏஆர்ஏ விருதுகள் வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் உலகின் சிறந்த நடிகருக்கான பட்டியலில் மெர்சல் திரைப்படத்திற்காக நடிகர் விஜய்யின் பெயர் இடம்பெற்றுள்ளது. 
2018 ஆம் ஆண்டுக்கான IARA செப்டம்பர் 22ஆம் தேதி லண்டன் மார்ஷ் வால் பகுதியில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது. இதில் சிறந்த  நடிகருக்கான பட்டியலில் தலை சிறந்த ஹாலிவுட் நடிகர்களான ஸ்டார் வார்ஸ் புகழ் ஜான் போயிகா, கெட் அவுட் திரைப்பட நடிகர் டேனியல் கலூயா, ஜாமி லோமஸ்(ஹொலியோக்ஸ்) க்ரிஸ் அட்டோ(ஸ்விங்ஸ்), ஏஜெண்ட் திரைப்பட நடிகர் கும்புலாமி கே சிபியா, சில்ட்ரன்ஸ் ஆப் லெஸ்ஸர் காட் நடிகர் ஜோஷுவா  ஜாக்சன், சைட் சிக் கேங் நடிகர் அட்ஜெட்டே அனாங், எல் ஹெபா எல் அவ்டா நடிகர் ஹசன் மற்றும் தி ராயல் ஹைபிஸ்கஸ் ஹோட்டல் பட நடிகர் கென்னத்  ஒக்கோலி ஆகியோருடன் விஜய்யின் பெயர் இடம்பெற்றுள்ளது. 
உலகின் சிறந்த நடிகர்களுக்கான போட்டியில் இந்திய அளவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் ஒரே நடிகர் விஜய் மட்டுமே. பாலிவுட் சினிமாவில் யாரும் தேர்வாகவில்லை. விஜய்யின் பெயர் விஜய் ஜோசப் (மெர்சல்) என்று இடம்பெற்றுள்ளது. இது மெர்சல் திரைப்படம் உலக அளவில் சென்றடைந்திருப்பதை காட்டுகிறது. இதில் ரசிகர்கள் வாக்களித்து சிறந்த நடிகரை தேர்ந்தெடுக்க வேண்டும்.