புதன், 27 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 16 ஜூலை 2018 (22:30 IST)

இந்த வாரமும் மகத் தப்பிச்சுட்டாரு: எவிக்சன் பட்டியலில் யார் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் புதிய தலைவர் மற்றும் எவிக்சன் பட்டியல் தேர்வு செய்யப்படும் அந்த வகையில் இந்த வார தலைவராக மகத் தேர்வு செய்யப்பட்டதால் இந்த வாரம் எவிக்சன் பட்டியலில் இருந்து மகத் தப்பித்துவிட்டார். ஆனால் எவிக்சன் பட்டியலில் அவர் சிக்கும் வாரம் நிச்சயம் வெளியேற்றம்தான்
 
இந்த நிலையில் இந்த வாரம் எவிக்சன் பட்டியலில் பாலாஜி, பொன்னம்பலம், ஜனனி மற்றும் ஐஸ்வர்யா தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே நேரடியாக எவிக்சன் பட்டியலில் சேர்ந்த ரம்யாவை சேர்த்து மொத்தம் ஐந்து பேர் எவிக்சன் பட்டியலில் உள்ளனர்.
 
இந்த வாரம் எவிக்சன் பட்டியலை பார்த்தால் ஐஸ்வர்யாவை வெளியேற்ற வேண்டும் என்று தான் பார்வையாளர்கள் விரும்புவார்கள். ஆனால் வாக்கெடுப்பின் முடிவு ஒன்றாகவும், பிக்பாஸ் வெளியேற்றும் நபர் ஒன்றாகவும் இருப்பதால் இனிமேலும் வாக்குகளை நம்ப யாரும் தயாராகவில்லை. நமது கணிப்பின்படி நிச்சயம் பிக்பாஸ், ஐஸ்வர்யாவை வெளியேற்ற மாட்டார் என்றுதான் தோன்றுகிறது.