திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 11 பிப்ரவரி 2018 (20:10 IST)

விபத்தில் சிக்கிய ரஷ்ய விமானம்: 71 பயணிகள் கதி என்ன?

ரஷ்யாவை சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்று திடீரென நடுவானில் விபத்துக்குள்ளானதால் அதில் பயணம் செய்த 71 பயணிகளும் மரணம் அடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ரஷ்யாவை சேர்ந்த ''சரடோவ் ஏர்லைன்ஸ்'' நிறுவனத்திற்கு சொந்தமான ஆன்டோனோவ் ஏஎன்-148 என்றா பெயரை கொண்ட இந்த விமானம் மாஸ்கோவில் இருந்து அரசாக் என்ற நகரம் நோக்கி இன்று சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த விமானம் பைலட்டுக்களின் கட்டுப்பாட்டை இழந்து ரஷ்யாவில் உள்ள ஆர்குனாவோ என்ற கிராமம் அருகே விழுந்து நொறுங்கியுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தகவல்கள் அளித்துள்ளன

இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த விபத்தை நேரில் பார்த்த அந்த கிராம மக்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் 6 பேர் விமான ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.