மண்டேலாவை ’’மாஸ்டர் பீஸ்’’ எனப் பாராட்டிய நடிகர் !

sivakarthikeyan
Sinoj| Last Updated: வியாழன், 8 ஏப்ரல் 2021 (21:11 IST)அஸ்வின் இயக்கத்தில் நடிகர் யோகிபாபு நடிப்பில் வெளியான மண்டேலா படத்தைப் பாராட்டிப் புகழ்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.


சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான திரைப்படம் ‘மண்டேலா’ என்பதும் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தில் நாயகியாக ஷீலா ராஜ்குமார் நாயகியாக நடித்து இருந்தார்.

இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மிகச்சரியாக தேர்தல் நேரத்தில் வந்துள்ள இந்த படம் தேர்தல் சம்பந்தப்பட்ட கதை என்பதால் ரசிகர்கள் ரசித்தார்கள்.

இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் திரையுலக பிரபலங்களும் தங்களுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் படக்குழுவினர்களுக்கு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல இந்த படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது;

மண்டேலா படம் ஒரு மாஸ்டர் பீஸ்…இப்படக் குழுவினருக்கு எனது வாழ்த்துகள்….. இப்படத்தை அனைவரும் தவறாமல் பார்த்து ரசியுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் இப்படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :