வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 19 ஜூன் 2024 (13:30 IST)

’கல்கி 2898 ஏடி’ படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவா? ரசிகர்களுக்கு பெரும் சோதனை..!

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலரது நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’கல்கி 2898 ஏடி’. 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகளும் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் வரும் 27ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 
 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
ரூபாய் 600 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை பார்த்து சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாகவும் மேலும் இந்த படம் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் அதாவது 178 நிமிடங்கள் ரன்னிங் டைம் என்றும் கூறப்படுகிறது.
 
 கிட்டத்தட்ட 3 மணி நேரம் ரன்னிங் டைம் உள்ள இந்த படம் ரசிகர்களின் பொறுமையை சோதிக்குமா? சுவராசியமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
Edited by Siva