ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (07:42 IST)

மாமாவைப் போல ஜி வி பிரகாஷும் ஆஸ்கர் விருது வெல்வார்… விக்ரம் நம்பிக்கை!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் உள்ள தங்கலான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஆகியவை அந்த எதிர்பார்ப்புக்கு தீனி போடுபவையாக அமைந்துள்ளன. படம் ஆகஸட் 15 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்த படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடிக்க, ஜி வி பிரகாஷ் இசையில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். கோலார் தங்கவயலில் வேலை செய்த தமிழர்களைப் பற்றிய படமாக தங்கலான் உருவாகியுள்ளதாக தெரிகிறது.

இந்த படத்துக்காக ஜி வி பிரகாஷ் வித்தியாசமான இசையைக் கொடுத்துள்ளதாக தகவலைப் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய நடிகர் விக்ரம் “இந்த படத்தின் இன்னொரு ஹீரோ ஜிவி பிரகாஷ்தான். பாடல்களுக்கு மட்டும் இல்லாமல் ஒவ்வொரு காட்சிக்கும் கடுமையாக உழைத்துள்ளார். எனக்கு விருதுகள் மேல் நம்பிக்கை இல்லை. ஆனாலும் ஜிவி தன்னுடைய இசையின் மூலம் உலகளவில் அங்கீகாரம் பெறுவார். சொல்ல முடியாது அவர்து மாமாவைப் போல ஆஸ்கர் விருது கூட அவரைத் தேடி வரலாம்” என பாராட்டி பேசியுள்ளார்.