வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 17 ஆகஸ்ட் 2024 (12:58 IST)

தங்கலான் குடுத்த முரட்டு ஹிட்..! இரண்டாம் பாகத்திற்கு தயாராகும் விக்ரம் - பா.ரஞ்சித்!

விக்ரம் நடித்து சமீபத்தில் வெளியான தங்கலான் படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்குவது குறித்து பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளியாகியுள்ள படம் தங்கலான். இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன். பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நேற்று முன் தினம் சுதந்திர தினத்தில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

 

வரலாற்றுடன், மாயாஜாலங்களும் கலந்து உருவாகியுள்ள இந்த படத்தில் விக்ரமின் நடிப்பை பலரும் புகழ்ந்து வரும் நிலையில், இந்த நடிப்புக்காக விக்ரமிற்கு பெரிய விருதுகள் கிடைக்கலாம் என பேச்சுகள் எழுந்துள்ளது. அதேசமயம் தங்கலான் படத்திற்கு ரசிகர்களிடையே கிடைத்துள்ள வரவேற்பால் மகிழ்ச்சியில் இருக்கிறார் விக்ரம்.

 

இதனால் தங்கலான் படத்திற்கு இரண்டாவது பாகம் எடுக்க வேண்டும் என விக்ரம், பா.ரஞ்சித்துடன் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய விக்ரம் ”தங்கலான் உங்கள் எல்லாருக்கும் பிடித்திருப்பதால் இரண்டாம் பாகம் எடுக்க விரும்புகிறோம். நாங்கள் இதுகுறித்து பேசி வருகிறோம்” எனக் கூறியுள்ளார். 

 

Edit by Prasanth.K