1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 25 ஜூன் 2021 (07:27 IST)

சீரியல் ஹீரோயின் ஆகும் தொகுப்பாளினி நக்ஷத்திரா நாகேஷ் - ப்ரோமோ வீடியோ!

வானவில், சன் சிங்கர் நிகழ்ச்சிகள் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமான நக்ஷத்ரா நாகேஷ். இவர் வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், மின்னலே, நாயகி என தொடர்ந்து பல தமிழ் சீரியல்களில் பிஸி நடிகையாக நடித்து வருகிறார். அதோடு திரைப்படங்களில் கிடைக்கும் சின்ன ரோல்களையும் ஏற்று நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகப்போகும் தமிழும் சரஸ்வதியும் என்ற புதிய சீரியலில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இதில் ஹீரோவாக தீபக் நடிக்கிறார். இந்த சீரியலின் ப்ரமோ வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள நக்ஷத்திராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.