1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 24 ஜூன் 2021 (07:02 IST)

வெறித்தனம் வெறித்தனம்... மூச்சு முட்ட Dead lift தூக்கும் சமந்தா கணவர்!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
 
பின்னர் 8 வருட  காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்ககளில் நடித்து வருகின்றனர்.  இருவரது நடிப்பில் வெளிவந்த மஜிலி திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  
 
திருமணத்திற்கு பின்னரும் இருவரும் பிசியாக நடித்து வருகின்றனர். சமந்தாவின் தி பேமிலி மென் 2 வெப்சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று ரீச் ஆனது. படத்தில் சமந்தாவின் நடிப்பு பெரிதும்  பாராட்டப்பட்டது. இந்நிலையில் சமந்தாவின் கணவர் நாகசைதன்யா ஜிம்மில் Dead lift  தூக்கி வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோடோலிவுட் ரசிகர்களின் லைக்ஸ் அள்ளியுள்ளது.