தாலி எங்கமா? உப்பு சப்பில்லாத காரணத்தை கூறிய அனிதா சம்பத்!
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா சம்பத் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்தார். அதன் பின்னர் காப்பான் உள்ளிட்ட பல படத்தில் நடித்திருந்தார்.
இதையடுத்து பிக்பாஸ் 4 சீசனில் பங்கேற்று தமிழ் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். இவர் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் பங்கேற்கும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் ஷாரிக்கிற்கு ஜோடியாக நடனமாடி வருகிறார்.
இந்நிலையில் அனிதா வெளியிட்ட புகைப்படமொன்றில் தாலி எங்கே? என அதிர்ச்சியாக கேட்ட ரசிகருக்கு, “என் செய்தியை அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் பார்ப்பார்கள். எனவே நான் மதத்தை அடையாளப்படுத்த விரும்பவில்லை. தாலியை மறைத்து தான் வைத்திருக்கிறேன். கழட்ட வில்லை, அப்படியே கழட்டினாலும் எந்த தவறும் இல்லை” என்று கூலாக கூறியுள்ளார்.