வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 11 அக்டோபர் 2022 (08:55 IST)

பாடலாசிரியர் தாமரைப் பெயரில் போலி டிவிட்டர் கணக்கு

தமிழ் சினிமாவில் இயங்கி வரும் பாடல் ஆசிரியர்களில் பிரபலமானவர் தாமரை.

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பாடல் ஆசிரியர் தாமரை. இத்தனை ஆண்டுகளில் அவர் அதிகளவில் பாடல்கள் எழுதவில்லை என்றாலும், அவரின் பல பாடல்கள் எவர்கிரீன் ஹிட்டாகியுள்ளன.

குறிப்பாக கௌதம் மேனன் படத்துக்காக ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் ஆகியோரோடு இணைந்து பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். சமீபத்தில் ரிலீஸான வெந்து தணிந்தது காடு படத்தில் கூட அவர் எழுதிய “மல்லிப்பூ” பாடல் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.

இந்நிலையில் தாமரை பெயரில் டிவிட்டரில் போலியான கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி அறிந்து அவர் புகார் செய்தவுடன் அந்த கணக்கு நீக்கப்பட்டுள்ளது.