1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 30 நவம்பர் 2021 (15:00 IST)

எவனயாச்சும் கட்டிப்பிடிக்குறதே உன் வேலை... சவுண்ட் பார்ட்டியை வச்சு செய்யும் தாமரை!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முதல் முதலில் தாமரையை பார்த்து பலரும் வெகுளித்தனமான மிகவும் பவ்யமான போட்டியாளர் என்றால் அது தாமரை தான் என பேசினார். டாஸ்க், சண்டை , கொளுத்திப்போடுவது இதெல்லாம் தான் பிக்பாஸ் வீட்டில் நிலைத்து நிற்பதற்கான செயல்கள். 
 
ஆனால், இதிலெல்லாம் தாமரை என்ன பண்ணிட போகுதுனு என நினைத்த பலரையும் வாய் மேல் விறல் வைக்கும் அளவிற்கு ஷாக் கொடுத்தார் தாமரை.  வீட்டில் உள்ள போட்டியாளர்கள் வம்பிழுத்தால் விட்டேனேனான்னு இறங்கி ஓடவிடுகிறார். 
 
நமிதாவில் ஆரம்பித்து மதுமிதா, பாவனி , ராஜு, பிரியங்கா என ஒருத்தரையும் விடாமல் வெளுத்து வாங்குகிறார். இந்நிலையில் இன்று பிரியங்காவுடன் மோதியுள்ளார். தாமரையை மறைமுகமாக முன்னாடி ஒன்னு பண்றாங்க பின்னாடி ஒன்னு பேசுறாங்க என குறி வைத்து தாக்க நீ பாசம்னு கட்டிப்பிடிச்சு கொழையுறத வேலையா வச்சிருக்க என சீண்டி சண்டையை பெரிது படுத்திவிட்டார். இன்னைக்கு நைட் சம்பவம் இருக்கு..