ஞாயிறு, 13 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2024 (18:20 IST)

ரஜினிகாந்த் உடல்நலம்: தளபதி விஜய் வெளியிட்ட அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தளபதி விஜய் சமூக வலைதளத்தில் அவருக்குப் பதிலாக விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
நடிகர் ரஜினிகாந்த் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் மற்றும் அவர் எப்போது டிச்சார்ஜ் செய்யப்படுவார் என்பதற்கான தகவல்களை சற்றுமுன் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
இந்த நிலையில், ரஜினிகாந்த் விரைவில் குணமாக வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தற்போது தளபதி விஜய் தனது சமூக வலைதளத்தில், "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் பூரண உடல் நலத்துடன் வீடு திரும்ப வேண்டும்" எனத் தெரிவித்து, உளமாற இறைவனை வேண்டியுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
 
Edited by Mahendran