வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2024 (13:14 IST)

'வேட்டையன்’ சென்சார் தகவல்.. ரன்னிங் டைம் இவ்வளவு தானா?

சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்த "வேட்டையன்" படத்தின் சென்சார் விவரங்கள் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான "வேட்டையன்" திரைப்படம், ஆயுத பூஜை விடுமுறை தினமான அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாக இருக்கின்ற நிலையில், இப்படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், நேற்று சென்சார் அதிகாரிகள் இப்படத்தை பார்த்து, யுஏ சான்றிதழ் வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இப்படத்தின் ரன்னிங் டைம் 160 நிமிடங்கள், அதாவது 2 மணி நேரம் 40 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
"இந்தியன் 2" மற்றும் "மெய்யழகன்" போன்ற படங்கள் சமீபத்தில் வெளியான நிலையில், அவை கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடியதால், ரிலீஸுக்கு பின்னர் அவற்றின் நீளத்தை குறைத்தனர். 
 
ஆனால் "வேட்டையன்" படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் என்பதால், ட்ரிம்மிங் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று சமூக வலைதளங்களில் ரஜினிகாந்த் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
 
Edited by Mahendran