தளபதி 63 அப்டேட் கூடிய விரைவில்! விஜய் தரப்பினர் தகவல்!

Last Updated: சனி, 4 மே 2019 (17:11 IST)
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளனர்.


 
விஜய்க்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கும்  இப்படத்தில்  கதிர், யோகிபாபு உள்ளிட்டோர்  நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. 
 
விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும், மேலும், இந்த படம் பெண்கள் கால்பந்து போட்டியை பற்றிய கதையாக இருக்கும் என ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகின. தற்போது படப்பிடிப்பு வேகமெடுத்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் விஜய் ரசிகர்கள் அவ்வப்போது அப்டேட் கேட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் தற்போது அதனை கருத்தில் கொண்டு இப்படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து 70 நாட்கள் வரை நடைபெற உள்ளதாம். அதுமட்டுமல்லாமல் படம் பற்றிய அப்டேட் விரைவில் வெளிவரக்கூடும், அதுவரை தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று படக்குழுவினர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :