திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 3 மே 2019 (14:57 IST)

அஜித் பிறந்தநாளன்று நடுரோட்டில் ரகளை செய்த விஜய் ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்கும் இரண்டு ஜாம்பவான்கள் அஜித், விஜய் தான். இவர்கள் இருவருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் இருக்குறது நம் அனைவர்க்கும் தெரிந்ததே. தங்களுக்கு ஏதாவதென்றால் ரசிகர்கள் ஒன்றுகூடிவிடுவார்கள்.


 
அந்தவகையில் சமீபத்தில் நடிகர் அஜித் தனது 48 வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரின் ரசிகர்கள் இதனை வெகு சிறப்பாக கொண்டாடி சமூக வலைதளம் முழுக்க அஜித்திற்கு பிறந்தநாள் தெரிவித்து பல்வேறு ஹேஷ்டேக்குகளை உருவாக்கி அன்றைய நாளில் ட்ரெண்டிங் செய்தனர். மேலும் குழந்தைகள் காப்பகம் , முதியோர் இல்லம் என அஜித் ரசிகர்களின் கூட்டம் குவிந்தது. 
 
இந்த நிலையில் தற்போது அஜித் பிறந்தநாளுக்கு போட்டியாக அவரது ரசிகர்களுடன் போட்டியிடும் வகையில்  விஜய் ரசிகர்கள் சிலர் நடு ரோட்டில் விஜய்யின் புகைப்படம் கொண்ட பேனரை பிடித்துக்கொண்டு "கடவுளே..விஜயே..விஜயே..கடவுளே...சாகும்வரை தளபதியாரின் காலடியில்" என்று கோஷமிட்டு பாலபிஷேகம் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்களால் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.