வியாழன், 20 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 20 பிப்ரவரி 2025 (09:03 IST)

சந்தோஷ் நாராயணனின் உருகும் குரலில் ‘கண்ணாடிப் பூவே’… ரெட்ரோ பாடல் படைத்த சாதனை!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா ஆகியோருடன் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படம் மே 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘கண்ணாடிப் பூவே’ பாடல் வெளியானது. சந்தோஷ் நாராயணன் குரலில் விவேக் வரிகளில் இந்த பாடல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்த பாடல் வெளியான 5 நாட்களுக்குள்ளாகவே ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இதை நெகிழ்ச்சியோடு பகிர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.