1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 3 ஜனவரி 2019 (13:42 IST)

நிகழ்ச்சி தொகுப்பாளனாகிய விஜய் மகன்

நிகழ்ச்சி தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார் தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் .


 
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்  தற்போது கனடாவில் சினிமா தொடர்பான படிப்பை படித்து வருகிறார். சமீபத்தில் குறும்படம் ஒன்றில் நடித்துள்ள அவர் விரைவில் தமிழ் சினிமாவிலும் நடிக்கலாம் என நம்ப தகுந்த வட்டாரங்களில் பேசப்படுகிறது.
 
திரையுலகில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக மக்கள் மனதை கொள்ளை கொண்ட நடிகராக தமிழ் சினிமாவின் தளபதியாய் உயர்ந்து நிற்பவர் நடிகர் விஜய். இவர் தனது 26 ஆண்டு சினிமா பயணத்தில் 62 படங்களில் பல வித்யாசமான கதாபாத்திரங்களில்  நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார். 
 
இந்நிலையில் சமீபத்தில் தளபதியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியொன்று வெளியானது. அதாவது நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஆங்கில குறும்படமான "ஜங்ஷன்" படத்தில் நடித்திருக்கிறார். இதில் கவியன், ரோஹித், அஸ்வின், கோகுல் மற்றும் சஞ்சய் நடித்திருக்கின்றனர். 
 
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அந்த குறும்படத்தை அவரே நடித்து இயக்கியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.அதனை தொடர்ந்து தமிழ் திரையுலகில் கால் பதிப்பாரா சஞ்சய் என்ற ஏக்கத்தில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் விஜய்யின் ரசிகர்கள் .
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள செய்தி என்னவென்றால் இயக்கம் , நடிப்பை தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் புது அவதாரம் எடுத்துள்ளார் சஞ்சய் . 
 
விடியோவை பார்க்கும் போது விஜய்யை அப்படியே நம் கண் முன் நிறுத்துகிறார் சஞ்சய் . அப்பாவை போலவே அமைதியாக அவ்வளவு புத்திசாலிதமான கேள்விகளை முன்வைக்கிறார். தான் பிரபலத்தின் பிள்ளை என்பதை கொஞ்சமும் காட்டிக்கொள்ளாமல் விஜய்யை போலவே நடந்துகொள்கிறார்.