விஜய்யின் ‘பீஸ்ட்’ ரிலீஸ் தேதி இதுதான்: சன்பிக்சர்ஸ் அறிவிப்பு!
தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என செய்திகள் வெளியான நிலையில் சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ரிலீஸ் தேதியுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அட்டகாசமான போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த படத்தின் பிரமோஷன் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளது